இருதயபுரம் கிழக்கு பகுதியில் உள்ள சிங்கள மக்களது மயானத்தில் வீடு உடைத்த கழிவுப்பொருட்கள் போடப்பட்டுள்ள நிலையில், அங்கு வந்த அம்பிட்டிய சுமனரத்ன தேரர் அதற்கு எதிராக கடுமையான வார்த்தைப் பிரயோகங்களை பிரயோகித்ததுடன், தமது தாயாரின் சமாதி குறித்த பகுதியில் அமைந்திருப்பதாகவும் தெரிவித்து, தகாத வார்த்தைகள் மூலம் தமிழ் மக்களை எச்சரித்துள்ளார்.
அனைத்து தமிழர்களையும் வெட்டுவேன், என்ன செய்கிறார்கள் எனப் பார்ப்போம் என அவர் கடும் வார்த்தை பிரயோகம் மேற்கொண்டதையடுத்து, அந்த பகுதியில் உள்ள மக்களுக்கும் அம்பிட்டிய சுமனரத்ன தேரருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த இடத்தில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.
குறித்த பகுதிக்கு இரு முச்சக்கர வண்டிகளில் தனது சகாக்களுடன் வந்து மக்களை அச்சுறுத்த முற்பட்டதாலேயே இவ்வாறு பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.
நிலைமையை பொலிஸார் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதுடன், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

