ஆசிரியர் சங்கங்கள் இன்று (27.10) நாடளாவிய ரீதியில் பாடசாலைகளுக்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டங்களைமுன்னெடுக்க ஏற்பாடு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 24ஆம் திகதி பத்தரமுல்லை பெலவத்த பிரதேசத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைகளை பிரயோகித்ததில் பலர் காயமடைந்துள்ளனர்.
எனவே, இன்று மதியம் 1.30 மணிக்கு பாடசாலை முடிந்ததும், பாடசாலைகளுக்கு முன்பாக ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.