திருமண விருந்தொன்றில் கலந்து கொண்ட யுவதி ஒருவர் இறைச்சி உள்ளிட்ட பல வகை உணவுகளை உண்ட பின்னர் திடீரென சுகவீனமடைந்து உயிரிழந்துள்ளதாக புத்தளம் தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆனமடுவ நகரைச் சேர்ந்த இருபது வயதுடைய எச்.எம் அயோத்தி தேஷானி விஜேவர்தன என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உணவு ஒவ்வாமை காரணமாகவே இந்த உயிரிழப்பு இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இவர் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சில நிமிடங்களில் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்துள்ளன.