அரச பணியாளர்கள் பணி புறக்கணிப்பில்!

அரச பணியாளர்கள் தங்களது பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று (30.10) நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுக்கப்பட்டுத்துள்ளனர்.

சம்பள அதிகரிப்பு உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து அரச மற்றும் மாகாண அரச சேவை சங்கங்கள் இந்த போராட்டங்களை ஏற்பாடு செய்துள்ளன.

நாளாந்த அத்தியாவசிய, அனைத்துப் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் 300-400 வீதம் வரை அதிகரித்துள்ள போதிலும் தங்கள் கொடுப்பனவுகளில் மாற்றம் இல்லை என போராட்டக்காரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Social Share

Leave a Reply