யாழில் நிர்மலா சீதாராமன்!

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்த இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (03.11) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் புதிய தொழிநுட்பம் மற்றும் தயாரிப்பு வர்த்தக கண்காட்சியை பார்வையிடும் நிகழ்விலும் இந்திய நிதியமைச்சர் கலந்து கொண்டுள்ளார்.

மேலும், யாழ்ப்பாணம் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்தியன் வங்கிக் கிளையை திறந்து வைக்கும் நிகழ்விலும் கலந்துகொண்டுள்ளார்.

யாழ்ப்பாணம் கலாசார மண்டபத்தில் வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் மற்றும் இந்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்றும் தற்செயலாக இடம்பெற்றுள்ளதுடன், அந்த நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய, இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, உள்ளிட்டோரும் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Social Share

Leave a Reply