நேபாளத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக இதுவரையில் 128 பேர் வரையில் பலியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
6.4 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கம் பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 100 பேர் காயமடைந்துள்ளதுடன், அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.