லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை இன்று (04.11) நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் முன்னரே அறிவித்திருந்தது.
12.5 கிலோ எடை கொண்ட லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.95 அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை ரூ.3,565 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
05 கிலோ எடை கொண்ட லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 38 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலை ரூ. 1,431 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும், 2.3 கிலோ எடை கொண்ட லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 18 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலை 668 ரூபாவாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.