வெற்றி பெறக்கூடிய ஓட்ட எண்ணிக்கையை பெற்றது இலங்கை

வெற்றி பெறக்கூடிய ஓட்ட எண்ணிக்கையை பெற்றது இலங்கை

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான உலகக்கிண்ண தொடரின் 38 ஆவது போட்டி டெல்லியில் இன்று நடைபெற்று வருகிறது.

டெல்லி அருண்ஜெட்லீ மைதானாத்தில் ஆரம்பித்துள்ள போட்டியில் பங்களாதேஷ் அணி களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது.

இலங்கை அணியின் முதல் விக்கெட் வேகமாக வீழ்த்தப்பட்டது. 3 ஆவது விக்கெட் இணைப்பாட்டத்திற்காக ஜோடி சேர்ந்த குசல் மென்டிஸ், பத்தும் நிசங்க ஆகியோர் 61 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்து கொண்டனர். குசல் மென்டிஸ், பத்தும் நிசங்க இருவரும் ஆட்டமிழந்ததுடன் ஜோடி சேர்ந்த சதீர சமரவிக்ரம, சரித் அசலங்க ஆகியோர் 63 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்து கொண்டனர். சதீர ஆட்டமிழந்ததுடன் துடுப்பாட வந்துகொண்டிருந்த அஞ்சலோ மத்தியூஸின் தலைக்கவசம் உடைந்ததன் காரணமாக புது தலைக்கவசம் எடுத்து கொண்டு வரும் போது நடுவர்கள் டைம் அவுட் முறையில் ஆட்டமிழந்துவிட்டதாக கூறியிருந்தார். 6 ஆவது விக்கெட் இணைப்பாட்டத்திற்காக ஜோடி சேர்ந்த தனஞ்சய டி சில்வா, சரித் அசலங்க ஆகியோர் 78 ஓட்டங்களை இணைப்பட்டமாக பகிர்ந்து கொண்டனர். சரித் அசலங்க அதிரடியாகவும், நிதானமாகவும் துடுப்பாடி அவரது 2 ஆவது சதத்தையும் உலககிண்ணத்தில் 1 ஆவது சதத்தையும் பூர்த்தி செய்து மீள்வருகை ஒன்றை ஏற்படுத்தியுள்ளார். மஹீஸ் தீக்ஷணவும் நிதானமாக துடுப்பாடி சரித் அசலங்கவின் சதத்திற்கு உதவி செய்து 45 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்து கொண்டனர். பந்துவீச்சில் தஸ்கின் அஹமட் இறுக்கமாக பந்துவீசியிருந்தார். மெஹிடி ஹசன் மிராஸ் இலங்கை அணியின் முக்கியமான விக்கெட்களை கைப்பற்றினார்.

இலங்கை அணி 49.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 279 ஓட்டங்களை பெற்றது.

வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
பத்தும் நிஸ்ஸங்கBowledரன்ஷிம் ஹசன் 413680
குசல் பெரேராபிடி- முஷ்பிகுர் ரஹீம்ஷொரிபுல் இஸ்லாம்040510
குஷல் மென்டிஸ்பிடி- ஷொரிபுல் இஸ்லாம்ஷகிப் அல் ஹசன்193011
சதீர சமரவிக்ரமபிடி- மஹ்மதுல்லாஷகிப் அல் ஹசன்414280
சரித் அசலங்கபிடி- லிட்டொன் டாஸ்ரன்ஷிம் ஹசன் 10810565
அஞ்சலோ மத்தியூஸ்Timed Out000000
தனஞ்சய டி சில்வாStump – முஷ்பிகுர் ரஹீம்மெஹிதி ஹசன் மிராஸ்343641
மஹீஸ் தீக்ஷணபிடி- நசும் அஹமட்ஷொரிபுல் இஸ்லாம்223130
துஷ்மந்த சமீர Run Out  04 09 0
கஸூன் ரஜிதபிடி- லிட்டொன் டாஸ்ரன்ஷிம் ஹசன் 000200
டில்ஷான் மதுஷங்க   00 01
உதிரிகள்  06   
ஓவர்  49.3விக்கெட்  10மொத்தம்279   
பந்துவீச்சாளர்ஓ.ஓட்டவிக்
ஷொரிபுல் இஸ்லாம்9.300 52 02
தஸ்கின் அஹமட்10013900
ரன்ஷிம் ஹசன் 10008003
ஷகிப் அல் ஹசன்10005702
மெஹிதி ஹசன் மிராஸ்10004901

இந்த உலகக்கிண்ண தொடரில் எட்டு இடங்களுக்குள் வரும் அணிகள் சம்பியன் கிண்ணப் போட்டிகளில் விளையாடத் தகுதி பெறும். ஆகையால் இரு அணிகளும் அதனை குறிவைத்து இன்றைய போட்டியில் வெற்றி பெற இரு அணிகளும் போராடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இலங்கை அணி ஏழாமிடத்தில் காணப்படுகின்றது. இன்று வெற்றி பெற்றால் ஏழாமிடம் தொடரும். பங்களாதேஷ் அணி வெற்றி பெற்றால் ஏழாமிடம் வரை முன்னேறும் வாய்ப்பு கிடைக்கலாம்.

இரு அணிகளும் உலகக்கிண்ண தொடரின் அரை இறுதி வாய்ப்புக்களை இழந்துள்ளன.

அணி விபரம்

இலங்கை அணி: குஷல் மென்டிஸ்(தலைவர்), குஷல் பெரேரா , பத்தும் நிஸ்ஸங்க, சதீர சமரவிக்ரம, சரித் அசலங்க, அஞ்சலோ மத்தியூஸ், தனஞ்சய டி சில்வா, மஹீஸ் தீக்ஷண, டில்ஷான் மதுஷங்க, துஷ்மந்த சமீர, கஸூன் ரஜித

பங்காளதேஷ் அணி: ஷகிப் அல் ஹசன்(தலைவர்), நஜ்முல் ஹொசைன் சாண்டோ, லிட்டொன் டாஸ், தௌஹித் ரிடோய் , ரன்ஷித் ஹசன், முஷ்பிகுர் ரஹீம், மெஹிதி ஹசன் மிராஸ், மஹ்மதுல்லா, தஸ்கின் அஹமட், ரன்ஷிம் ஹசன் , ஷொரிபுல் இஸ்லாம்

Social Share

Leave a Reply