விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் நியமிக்கப்பட்ட கிரிக்கெட் இடைக்கால நிர்வாக குழு மற்றும் கிரிக்கெட் சபையை இடைநிறுத்துவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை நடைமுறைப்படுத்துவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இலங்கை கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் ஷம்மி சில்வாவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் விக்கும் களுஆராச்சி ஆகியோர் அடங்கிய குழுவே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.