
அவுஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான உலகக்கிண்ண தொடரின் 39 ஆவது போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி அவுஸ்திரேலியா அணியை வெற்றி பெற்று நான்காமிடத்துக்கு முன்னேறிவிட்டது என்ற எதிர்பார்ப்பை க்ளென் மக்ஸ்வெல் தவிடு பொடியாக்கி தனது அணிக்கு 3 விக்கெட்கள் வித்தியாசத்தினாலான வெற்றியை பெற்றுக் கொடுத்தார்.
இந்தியா, மும்பை வங்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் பலமான அவுஸ்திரேலியா அணி ஆரம்ப விக்கெட்களை இழந்து தடுமாறியது. வெற்றி பெற முடியாது என்ற நிலையில் இருந்த அவுஸ்திரேலியா அணியை மக்ஸ்வெல் வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் 05 விக்கெட்களை இழந்து 280 ஓட்டங்களை பெற்றது.
ஆரம்ப துடுப்பாட்ட வீரர் இப்ராஹிம் ஷர்டான் சதமடித்து நல்ல ஆரம்பத்தை வழங்கினார். அவர் இறுதி வரை ஆட்டமிழக்கவில்லை. அனைவருடனும் நல்ல இணைப்பாட்டங்களை ஏற்படுத்தி அணியின் ஓட்ட எண்ணிக்கை உயர்வதற்கு முக்கிய காரணமாக அமைந்தார். பலமான அவுதிரேலியா அணியின் பந்துவீச்சு ஆப்கானிஸ்தான் அணிக்கு பெரியளவில் அச்சறுத்தலாக அமையவில்லை.
இறுதி நேரத்தில் ஷர்டான், ரஷீட் கால் ஜோடி அதிரடியாக துடுப்பாடி ஓட்ட எண்ணிக்கையினை உயர்த்தினர், இதன் காரணமாக ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெறக்கூடிய ஓட்ட இலக்கை அடைந்தது.
அவுஸ்திரேலியா அணி ஆரம்பம் முதலே அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து தடுமாறியது. க்ளென் மக்ஸ்வெல் நிதானமாக துடுப்பாடி ஓட்ட எண்ணிக்கையினை உயர்த்தினார். பின்னர் அதிரடி நிகழ்த்தி ஓட்ட எண்ணிக்கையினை உயர்த்தி வெற்றி வாய்ப்பை தம் பக்கமாக மாற்றினார். அவரின் பிடி நழுவவிடப்பட்டது ஆப்கானிஸ்தான் அணிக்கு பின்னடைவை வழங்கியது.
தனித்து நின்று உபாதையோடு அதிரடி நிகழ்த்திய மக்ஸ்வெல், பட் கம்மின்சுடன் இணைந்து ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் பெறப்பட்ட கூடுதலான எட்டாவது விக்கெட் இணைப்பாட்ட சாதனையை பெற்றுக் கொண்டனர்.
கால் இயலாமையுடன் மக்ஸ்வெல் அடித்தாடிய விதம் அசாதாரண துடுப்பாட்டம் என்றே கூற முடியும். கிரிக்கெட்டில் இவ்வாறு துடுப்பாட முடியுமா என கேள்வி எழுப்பக்கூடிய நிலையில் மக்ஸ்வெல்லின் துடுப்பாட்டம் அமைந்தது. இந்த துடுப்பாட்டம் தொடர்பில் வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. வெல்லவே முடியாது என்ற போட்டியில் நிலையை மாற்றி வெற்றியை அணிக்கு பெற்றுக் கொடுத்தார் மக்ஸ்வெல். இந்த வெற்றியின் மூலம் அவுஸ்திரேலியா அணி அரை இறுதிக்கு தெரிவாக்கியது.
மக்ஸ்வெல் இன்று பெற்றுக்கொண்ட ஓட்டங்களே அவுஸ்திரேலியா அணியின் முதலாவது இரட்டைச்சதமாகும்.
விளையாடிய 8 போட்டிகளில் 6 வெற்றிகளைப் பெற்று 12 புள்ளிகளை பெற்று அணி பெற்று அரை இறுதி வாய்ப்பை பெற்றுள்ளது. ஆப்கானிஸ்தான் அணி 8 போட்டிகளில் 4 வெற்றிகளைப் பெற்று 8 புள்ளிகளோடு ஆறாவது இடத்தில தொடர்கிறது.
வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
டேவிட் வோர்னர் | Bowled | அஸ்மதுல்லா ஓமர்சாய் | 18 | 29 | 3 | 0 |
ட்ரவிஸ் ஹெட் | பிடி – இக்ரம் அலிகில் | நவீன் உல் ஹக் | 00 | 02 | 0 | 0 |
மிற்செல் மார்ஷ் | L.B.W | நவீன் உல் ஹக் | 24 | 11 | 2 | 2 |
மார்னஸ் லபுஷேன் | Run Out | 14 | 28 | 2 | 0 | |
ஜோஷ் இங்லிஷ் | பிடி – இப்ராஹிம் ஷர்டான் | அஸ்மதுல்லா ஓமர்சாய் | 00 | 01 | 0 | 0 |
க்ளென் மக்ஸ்வெல் | 201 | 128 | 21 | 10 | ||
மார்கஸ் ஸ்ரொய்னிஸ் | L.B.W | ரஷீட் கான் | 06 | 07 | 1 | 0 |
மிட்செல் ஸ்டார்க் | பிடி – இக்ரம் அலிகில் | ரஷீட் கான் | 03 | 07 | 0 | 0 |
பட் கம்மின்ஸ் | 12 | 68 | 1 | 0 | ||
உதிரிகள் | 15 | |||||
ஓவர் 46.5 | விக்கெட் 07 | மொத்தம் | 293 |
பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட்ட | விக் |
முஜீப் உர் ரஹ்மான் | 8.5 | 01 | 72 | 00 |
நவீன் உல் ஹக் | 09 | 00 | 47 | 02 |
அஸ்மதுல்லா ஓமர்சாய் | 07 | 01 | 52 | 02 |
ரஷீட் கான் | 10 | 00 | 44 | 02 |
நூர் அஹமட் | 10 | 01 | 53 | 00 |
மொஹமட் நபி | 02 | 00 | 20 | 00 |
வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
ரஹ்மனுல்லா குர்பாஸ் | பிடி – மிட்செல் ஸ்டார்க் | ஜோஸ் ஹெஸல்வூட் | 21 | 25 | 2 | 0 |
இப்ராஹிம் ஷர்டான் | 129 | 143 | 8 | 3 | ||
ரஹ்மத் ஷா | பிடி – ஜோஸ் ஹெஸல்வூட் | க்ளென் மக்ஸ்வெல் | 30 | 44 | 1 | 0 |
ஹஷ்மதுல்லா ஷஹிதி | Bowled | மிட்செல் ஸ்டார்க் | 26 | 43 | 2 | 0 |
அஸ்மதுல்லா ஓமர்சாய் | பிடி – க்ளென் மக்ஸ்வெல் | அடம் ஷம்பா | 22 | 18 | 1 | 2 |
மொஹமட் நபி | Bowled | ஜோஸ் ஹெஸல்வூட் | 12 | 10 | 1 | 1 |
ரஷீட் கான் | 35 | 18 | 2 | 3 | ||
உதிரிகள் | 16 | |||||
ஓவர் 50 | விக்கெட் 05 | மொத்தம் | 291 |
பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட்ட | விக் |
மிட்செல் ஸ்டார்க் | 09 | 00 | 70 | 00 |
ஜோஸ் ஹெஸல்வூட் | 09 | 00 | 39 | 02 |
க்ளென் மக்ஸ்வெல் | 10 | 00 | 55 | 01 |
பட் கம்மின்ஸ் | 08 | 00 | 47 | 00 |
அடம் ஷம்பா | 10 | 00 | 58 | 01 |
ட்ரவிஸ் ஹெட் | 03 | 00 | 15 | 00 |
மார்கஸ் ஸ்ரொய்னிஸ் | 01 | 00 | 02 | 00 |
அணி | போ | வெ | தோ | ச/ கை | பு | ஓட்ட சராசரி வேகம் |
இந்தியா | 08 | 08 | 00 | 00 | 16 | 2.456 |
தென்னாபிரிக்கா | 08 | 06 | 02 | 00 | 12 | 1.376 |
அவுஸ்திரேலியா | 08 | 06 | 02 | 00 | 12 | 0.861 |
நியூசிலாந்து | 08 | 04 | 04 | 00 | 08 | 0.398 |
பாகிஸ்தான் | 08 | 04 | 04 | 00 | 08 | 0.036 |
ஆப்கானிஸ்தான் | 08 | 04 | 04 | 00 | 08 | -0.338 |
பங்களாதேஷ் | 08 | 02 | 06 | 00 | 04 | -1.442 |
இலங்கை | 08 | 02 | 04 | 00 | 04 | -1.160 |
நெதர்லாந்து | 07 | 02 | 05 | 00 | 04 | -1.398 |
இங்கிலாந்து | 07 | 01 | 06 | 00 | 02 | -1.504 |
அணி விபரம்
அவுஸ்திரேலியா அணி: பட் கம்மின்ஸ்(தலைவர்) ,டேவிட் வோர்னர், மிற்செல் மார்ஷ், மார்னஸ் லபுஷேன், ட்ரவிஸ் ஹெட், மார்கஸ் ஸ்ரொய்னிஸ் , க்ளென் மக்ஸ்வெல், ஜோஷ் இங்கிலிஸ், மிட்செல் ஸ்டார்க், ஜோஸ் ஹெஸல்வூட், அடம் ஷம்பா
ஆப்கானிஸ்தான் அணி: ஹஷ்மதுல்லா ஷஹிதி (தலைவர்), ரஹ்மனுல்லா குர்பாஸ், இப்ராஹிம் ஷர்டான், இக்ரம் அலிகில், ரஹ்மத் ஷா, மொஹமட் நபி, அஸ்மதுல்லா ஓமர்சாய், ரஷீட் கான்,முஜீப் உர் ரஹ்மான், நவீன் உல் ஹக், நூர் அஹமட்