பஸ், முச்சக்கரவண்டி நேருக்கு நேர் மோதி விபத்து – 17 பேர் காயம்!

மாபலகமவில் இருந்து மத்துகம ஊடாக கொழும்பு நோக்கி பயணித்த பேருந்தும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 17 பேர் காயமடைந்துள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

களுத்துறை கலசேன பிரதேசத்திலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

காயமடைந்தவர்கள் களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்துள்ளது.

இந்த விபத்து காரணமாக களுத்துறை மத்துகம வீதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply