தபால் திணைக்களத்தின் வளங்களை விற்பனை செய்யும் அரசாங்கத்தின் முயற்சிக்கு எதிராக தபால் ஊழியர்களினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள இரண்டு நாள் அடையாள வேலை நிறுத்தம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஒன்றிணைந்த தபால் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக தபால் சேவையில் இடையூறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று, நாளை மற்றும் நாளை மறுதினம் அனைத்து ஊழியர்களின் விடுமுறையையும் இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளபோதிலும், இந்த பணிபுறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.