நாட்டின் நிலையும் கிரிக்கெட்டின் நிலையும் ஒன்றுதான் – சாணக்கியன்!

இலங்கை கிரிக்கெட்டின் நிலை, நாட்டின் நிலை இரண்டும் ஒன்றே என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

நாட்டின் மற்றும் கிரிக்கட்டின் அழிவுக்குக் காரணமானவர்கள் இவ்வாறு பேசுவது கேலிக்கூத்தானது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் நிறுவனம் தொடர்பான விவாதத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நீண்ட காலத்திற்கு முன்பே அமைச்சர் இந்த முடிவை எடுத்திருக்க வேண்டும் எனவும், கிரிக்கெட் மீதான மரியாதையை இலங்கை இழந்ததை அடுத்து இந்த முடிவு இப்போது எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவராக ஷம்மி டி சில்வா இருந்தபோது நாமல் ராஜபக்ச விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்தார். கிரிக்கெட் நிறுவனங்களில் அதே பெயர்கள் எப்படி தொடர்கிறது என்பதை நாம் பார்க்கிறோம்.

இந்த தோல்விகளுக்கு தற்போது ஓய்வு பெற்ற மூத்த வீரர்களும் பொறுப்பேற்க வேண்டும். இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்காமல் தங்கள் சாதனைகளுக்காக விளையாடினர். மூத்த வீரர்கள் ஒரேயடியாக வெளியேறும் போது இளம் வீரர்களுக்கு ஒன்றும் செய்ய முடியாது. எனவ , இதற்கான பொறுப்பை நாம் கூட்டாக ஏற்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

மாவட்ட அளவில் கூட கிரிக்கெட் தொடர்பான அதிகாரிகள் தான் உள்ளனர். எல்லாவற்றையும் இழந்த பின், இந்த மாற்றங்களை செய்ய முயற்சிக்கின்றனர்.

தொலைதூர மாவட்டங்களில் லெதர் பந்தைத் தொடாத திறமையான இளம் வீரர்கள் இருக்கின்றனர் என்பதைத்தான் நினைவுபடுத்துவதாகவும் சாணக்கியன் மேலும் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply