பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்ட சட்டவிரோத சிகரெட்டுகளுடன் கூடிய கொள்கலன் பாரவூர்தி தொடர்பில் இலங்கை சுங்க திணைக்களம் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
குறித்த கொள்கலன் தொடர்பில் இலங்கை சுங்கப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத சிகிரெட்டுகள் அடங்கிய கொள்கலன் தற்போது கிராண்ட்பாஸ் பொலிஸாரின் பொறுப்பில் உள்ளதுடன், இது தொடர்பான முழுமையான அறிக்கையை இலங்கை சுங்க திணைக்களம் இன்று (17.11) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் சமர்ப்பித்ததையடுத்து, கொள்கலனை மீண்டும் இலங்கை சுங்க பிரிவினரிடம் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த கொள்கலனை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியதன் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த சுங்க விசாரணைகளை விரைவில் மீள ஆரம்பிக்க இலங்கை சுங்கம் செயற்பட்டு வருவதாகவும் அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.