இலங்கை கிரிக்கெட் ஊழலை நீங்களும் உலகிற்கு சொல்லலாம்!

ஷம்மி சில்வா தலைமையிலான ஊழல் கிரிக்கெட் சபையின் ஆட்சி அதிகாரத்தை இரத்து செய்து புதிய இடைக்கால சபையை நியமிப்பதற்கு விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்க எடுத்த தீர்மானத்தை பொது மக்களும் அங்கீகரித்து வாக்களிப்பதற்கான ஓர் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட்டில் இடம்பெற்று வரும் ஊழல் மோசடிகள் குறித்து https://universe.lk/# ஊடாக சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு அறிவிக்குமாறு மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

விளையாட்டு துறை அமைச்சரினால் ஸ்ரீலங்கா கிரிக்கெட் இடைக்கால நிர்வாகசபை நியமிக்கப்பட்டமைக்கு ஸ்ரீலங்கா கிரிக்கட் தலைவர் ஷம்மி சில்வா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ரீட் மனுவின் அடிப்படையில் நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு வழங்கியது. குறித்த தடையை மீள் பரிசீலனை செய்யுமாறு விளையாட்டு துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்து. இந்த மனு மீண்டும் 22ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

Social Share

Leave a Reply