பேருந்திலிருந்து தவறி விழுந்து பெண் பலி!

கொழும்பில் இருந்து சிலாபம் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்குசொந்தமான பேருந்தில் பயணித்த கணவன் மனைவி இருவரும் மிதிபலகையில் இருந்து தவறி விழுந்ததில் விபத்துக்குள்ளாகுகியுள்ளனர்.

குறித்த விபத்தில் படுகாயமடைந்த பெண் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அம்பலன்முல்ல சீதுவ பிரதேசத்தை சேர்ந்த 56 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்று (20.11) காலை சீதுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொழும்பு – சிலாபம் வீதியில் ததுகம விமானப்படை வீதித் தடைக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சீதுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Social Share

Leave a Reply