”சேறு பூசுபவர்களின் கைகளிலும் சேறு இருக்கும்” – மஹிந்த ராஜபக்ஷ

பொருளாதாரம் தொடர்பான குற்றச்சாட்டுக்களை நிராகரிப்பதாக முன்னாள் ஜனாதிபதி,மஹிந்த ராஜபக்ஷ இன்று (21.11) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொருவருடைய உரிமைகளையும் பற்றி பேசுவோர், அன்று பண்ணியாற்றிய விதத்தை தாம் நன்கறிவதாகவும், ஒவ்வொருவரும் கேட்கும் கேள்விகளுக்கு தாம் பதிலளிக்க தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் போதே மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சேற்றை அள்ளி வீசுபவர்கள் கையில் கண்டிப்பாக சேறு இருக்கும் எனவும், யாரோ ஒருவரின் உரிமையை பறிக்க வேண்டும் என்று பேசுபவர்கள் முதலில் மக்களின் உரிமையை நிலைநாட்ட பாடுபடுங்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Social Share

Leave a Reply