பெலிஹுல் ஓயா, பகுதியில் மண் மேடு சரிந்து வீழ்ந்துள்ளதால் பதுளை – கொழும்பு வீதியின் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வீதியில் பயணிக்கும் வாகன சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
குறித்த வீதியில் தற்போது அதிக வாகன நெரிசல் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை 1.00 மணியளவில் பெய்த கடும் மழை காரணமாக மண் மேடு சரிந்து விழுந்துள்ளது.