நிமோனியாவை ஏற்படுத்தும், புதிய வகை வைரஸ் தொற்று சீனாவில் பரவி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், இதற்கு முன்னர் கண்டறியப்படாத வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் சிறு குழந்தைகள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், பெய்ஜிங் மற்றும் லியோனிங் உள்ளிட்ட பல சீன நகரங்களில் உள்ள மருத்துவமனைகள் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களால் நிரம்பி வழியத் ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்ட்டுள்ளது.
இந்த புதிய வைரஸ் சீனாவின் வடக்கு மாகாணங்களிலும் பரவியுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.