இரத்மலானையில் பேருந்து விபத்து!

மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பயணிகள் பஸ் ஒன்று இரத்மலானை கொலுமடம சந்தியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

சம்பவத்தில் படுகாயமடைந்த பஸ்ஸின் நடத்துனர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பேருந்தின் பிரேக் செயலிழந்ததன் காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பேருந்து சாலையை விட்டு விலகி வீதியின் நடுவில் இருந்த இரும்பு வேலியை மோதி நின்றுள்ளது.

விபத்தை அடுத்து அப்பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டதாகவும், விபத்து தொடர்பில் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Social Share

Leave a Reply