இந்தியா, மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையில் இந்தியா குவாத்தியில் நடைபெற்ற மூன்றாவது 20-20 போட்டியில் இந்தியா அணி வெற்றி பெறும் நிலையில் காணப்பட்ட வேளையில் க்ளன் மக்ஸ்வெல் அதிரடியாக அடித்தாடி சதத்தை பூர்த்தி செய்து அவுஸ்திரேலியா அணிக்கு வெற்றியினை பெற்றுக் கொடுத்துள்ளார்.
முதலில் துப்பாடிய இந்தியா அணி ருத்துராஹ் ஹெய்க்வூட்டின் சதம் மூலமாக 20 ஓவரில் 03 விக்கெட்களை இழந்து 222 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. ஹெய்க்வூட் 57 பந்துகளில் 123 ஓட்டங்களையும், சூர்யகுமார் யாதவ் 39 ஓட்டங்களையும், திலக் வர்மா ஆட்டமிழக்காமல் 31 ஓட்டங்களையும் பெற்றனர்.
பதிலுக்கு துடுப்பாடிய அவுஸ்திரேலியா அணி 20 ஓவர்களில் 05 விக்கெட்களை இழந்து 225 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. மக்ஸ்வெல் ஆட்டமிழக்காமல் 48 பந்துகளில் 104 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். ட்ரவிஸ் ஹெட் 35 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.