இன்று (01.12) காலை மலையக ரயில் பாதையின் தியத்தலாவ மற்றும் ஹப்புத்தளை ரயில் நிலையங்களுக்கு இடையில் மண்சரிவு ஏற்பட்டதால் மலையக ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி புகையிரத கட்டுப்பாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது.
குறித்த ரயில் பாதையில் பாதையில் பாரிய பாறைகளுடன் மண்மேடுகள் சரிந்து விழுந்து ரயில் பாதை தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கி பயணித்த இரவு நேர அஞ்சல் புகையிரதம் மண்சரிவு ஏற்பட்ட இடத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக மலையக ரயில் சேவை தாமதமாகலாம் எனவும் நாவலப்பிட்டி புகையிரத கட்டுப்பாட்டு அறை மேலும் தெரிவித்துள்ளது.