பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளாகி இருந்தா மத போதகர் ஜெரோம் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இரண்டாவது நாளாக இன்றைய தினம் (01.12) வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்த நிலையில் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் ஜெரோம் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டுள்ளார்.
மதங்களை இழிவுபடுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட இவர் வௌிநாட்டில் இருந்து நாடு திரும்பிய நிலையில் நேற்று காலை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகிருந்தார், இந்நிலையிலேயே இன்று இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.