நாடாளுமன்ற உறுப்பினர்களான டயனா கமகே, சுஜித் சஞ்சய பெரேரா மற்றும் ரோஹன பண்டார ஆகியோரின் நாடாளுமன்ற சேவையை ஒரு மாத காலத்திற்கு இடைநிறுத்துவதற்கு நாடாளுமன்ற நெறிமுறைகள் மற்றும் சிறப்புரிமைகள் குழு தீர்மானித்துள்ளது.
இராஜாங்க அமைச்சர் டயனா கமகே, நாடாளுமன்ற உறுப்பினர்களான ரோஹன பண்டார மற்றும் சுஜித் சஞ்சய பெரேரா ஆகியோருக்கு இடையில் கடந்த ஒக்டோபர் மாதம் 20ஆம் திகதி நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பிலேயே சிறப்புரிமைகள் குழு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.
இந்த சம்பவத்தை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டிருந்த குழுவின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சமல் ராஜபக்ஷ இத்தீர்மானத்தை இன்றைய நாடாளுமன்ற அமர்வில் அறிவித்துள்ளார்.