இலங்கையின் தென்னை சார் உற்பத்திகளுக்கு ஜப்பானில் அதிக மவுசு!

சீனா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தென்னை சார் உற்பத்தி பொருட்களுக்கு அதிக தேவை காணப்படுவதாக தென்னை அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இலங்கை தயாரிப்பான ”தவாஷி” தென்னை நார் துடைப்பான்களுக்கு வெளிநாட்டு சந்தையில் அதிக கேள்வி உள்ளதாகவும், சராசரியாக வருடத்திற்கு சுமார் 190,000 துடைப்பான்கள் ஏற்றுமதி செய்யப்படுவதாகவும், மேலும் ஜப்பானில் இதற்கு அதிக கேள்வி உள்ளதாகவும் தென்னை அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர தலைமையில் தென்னை அபிவிருத்தி அதிகாரசபையின் முன்னேற்றம் மற்றும் அதன் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் விவசாய அமைச்சில் இடம்பெற்ற மீளாய்வு கலந்துரையாடலின்போதே இந்த விடையங்கள் கந்துரையாடப்பட்டுள்ளன.

Social Share

Leave a Reply