அவிசாவளை லயன் குடியிருப்பில் தீப்பரவல்!

அவிசாவளை – பென்ரீத் தோட்ட பகுதியிலுள்ள தோட்ட குடியிருப்பொன்றில் இன்று முற்பகல் தீக்கிரையாகியுள்ளது. தீப்பரவல் காரணமாக 8 லயன் அறைகள் தீக்கிரையாகியுள்ளதாக அவிசாவளை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த லயன் குடியிருப்பிலிருந்த 4 வீடுகளுக்கு பகுதியளவில் சேதமடைந்துள்ள நிலையில் 8 குடும்பங்களைச் சேர்ந்த 45 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், அவிசாவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதேவேளை, பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக பெருந்தோட்ட மனிதவள நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமி தெரிவித்துள்ளார்.

அத்துடன், பாதிக்கப்பட்ட மக்கள் தற்காலிக இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதுடன், தமது நிபுணர் குழு சம்பவம் குறித்து அறிக்கை சமர்பித்ததன் பின்னர் வீடுகளை நிர்மாணித்துக்கொடுப்பது குறித்து தீர்மானிக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.

Social Share

Leave a Reply