கனமழை பெய்யும் இந்நேரத்தில் நீர்மின் உற்பத்தி அதிகரிப்பு காரணமாக இலங்கை மின்சார சபை பெரும் இலாபம் ஈட்டியதால் மின் கட்டண அதிகரிப்பை எதிர்த்ததாகவும், எதிர்ப்பையும் மீறி மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டாலும்,ஐந்து இலட்சத்திற்கும் அதிகமான மின்சார நுகர்வோரின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன என்றும், மின்சாரம் துண்டிக்கப்படும் என மேலும் பல இலட்சம் பேருக்கு சிவப்பு அறிவித்தல் அனுப்பப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
அபயராம விகாரையில் கூட சட்டவிரோதமாக மின்சார இணைப்பை துண்டிக்க முற்பட்டுள்ளனர் என்றும்,நீர் மின் உற்பத்தி அதிகரித்து மின்சார சபை கோடி கோடியாக இலாபம் ஈட்டும் போது, தேவையில்லாமல் மின்கட்டணத்தை அதிகரித்து 50 இலட்சம் பாவனையாளர்களுக்கு சிவப்பு அறிவித்தல் அனுப்பப்பட்டுள்ளதாகவும்,இது நியாயமா என கேள்வி எழுப்புவதாகவும்,தான் எழுப்பிய கேள்விக்கு இன்றும் பதில் வழங்காமையினால் தனது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (04.12) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.