ரஷ்ய பாடசாலை ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 5 பேர் காயமடைந்துள்ளதாக சரவதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
குறித்த பாடசாலையைச் சேர்ந்த 14 வயது மாணவி ஒருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரியவந்துள்ளது.
தனது வகுப்பறையில் இருந்த மாணவர்களை இலக்கு வைத்து தொடர் துப்பாக்கிச் சூடு தாக்குதல்களை மேற்கொண்ட குறித்த மாணவி, பின்னர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான மாணவர் ஒருவர் அங்கு உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஐவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மாணவி தனது தந்தைக்கு சொந்தமான துப்பாக்கியை இவ்வாறு பாடசாலைக்கு கொண்டு வந்ததுள்ளதாக ரஷ்ய பொலிஸார் மேற்கொண்டுள்ள விசாரணையில் தெரியவந்துள்ளது.