பலாங்கொடை ஹட்டன் பிரதான வீதியில் மண்சரிவு!

பலாங்கொடை ஹட்டன் பிரதான வீதியில் பலாங்கொடை பின்னவல பகுதியில் பாரிய மண்மேடு ஒன்று சரிந்து வீழ்ந்துள்ளது.

இதன் காரணமாக அந்த வீதியினூடான போக்குவரத்து இன்று (08.12) அதிகாலை முதல் முற்றாக தடைப்பட்டுள்ளது.

நேற்று இரவு பெய்த கடும் மழை காரணமாகவே இந்த மண் சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த இடத்தில் இதற்கு முன்னரும் பலமுறை மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply