மின்சாரத்திற்காக அதிக பணம் செலவழிக்கும் நாட்டில் மின்சாரம் எவ்வாறு தடைப்படும்?

நேற்றைய தினம் 9 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதனால் தேசிய பொருளாதாரத்திற்கு ஏற்படும் வீழ்ச்சி, நீர் விநியோகத்தில் இடையூறு, நோயாளிகள் வாழ்வுக்கும் சாவுக்கும் இடையில் போராட வேண்டிய நிலை போன்ற பாரிய இடைஞ்சல்கள், மின்சாரத்திற்காக அதிக பணம் செலவழிக்கும் நாட்டில் பாரிய பாதுகாப்பின்மைக்கு காரணம் என்ன என்பதை கண்டறிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்நாட்டிற்கு உகந்த மின்சார கட்டமைப்பு தேவை என்றும், மின் சபை மறுசீரமைப்பின் போது மின் சபையை தனியாருக்கு மாற்றுவதன் மூலம் எதிர்காலத்தில் நாட்டில் பேரழிவு நிலை உருவாகலாம் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

நேற்று (09.12) ஒரு மின்கடத்தி பழுதடைந்ததன் காரணமாக முழு நாட்டின் மின்சார கட்டமைப்பும் எவ்வாறு தடைப்பட்டது என்பது குறித்து பக்கச்சார்பற்ற விசாரணை தேவை என்றும், இந்த மின்சாரத் தடையின் ஊடாக நேற்றைய தினம் நாட்டிற்கு ஏற்பட்ட இழப்புக்கு தரமான மற்றும் துல்லியமான பகுப்பாய்வு நடத்தப்பட வேண்டும் என்றும், மீண்டும் இவ்வாறானதொரு சந்தர்ப்பம் நாட்டுக்கு ஏற்படக் கூடாது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது உரையில் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply