பராமரிப்பு பணிகள் காரணமாக செயலிழந்த நுரைச்சோலை லக்விஜய மின் நிலையத்தின் 3வது மின் பிறப்பாக்கி இயந்திரம் தேசிய மின் கட்டமைப்பில் இணைக்கப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, இன்றைய தினம் 300 மெகாவோட் மின்சாரம் தேசிய மின் கட்டமைப்பில் இணைக்கப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் நோயல் பிரியந்த தெரிவித்துள்ளார்.
நாடாளாவிய ரீதியில் நேற்றுமுன்தினம் ஏற்பட்ட மின்சார தடையினையடுத்து, நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் முதலாவது மின் பிறப்பாக்கி இயந்திரமும் செயலிழந்தது.
இந்நிலையில் 2வது மின் பிறப்பாக்கி இயந்திரம் மாத்திரமே இயங்கி வந்த நிலையில் , 3வது மின்பிறப்பாக்கி இயந்திரம் பராமரிப்பு பணிகளின் பின்னர், மின் உற்பத்திக்கு தயார் நிலையில் உள்ளதாக மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் நோயல் பிரியந்த தெரிவித்துள்ளார்.