குடியுரிமை தொடர்பில் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் புதிய அறிவிப்பு!

அவுஸ்திரேலியாவில் குடியுரிமை அனுமதி வழங்கப்படுவோரின் எண்ணிக்கையை அடுத்த இரண்டு ஆண்டுகளில் பாதியாக குறைக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்படி 2025 ஜூன் மாதத்திற்குள் 250,000 குடியேற்றவாசிகள் மட்டுமே குடியுரிமை வாய்ப்பு வாழ்நகப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வெளிநாடுகளில் இருந்து வரும் மாணவர்கள் மற்றும் குறைந்த திறன் கொண்ட தொழிலாளர்களுக்கான விசா விதிகளை கடுமையாக்க அந்நாட்டு அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளில், ஆஸ்திரேலியாவில் வெளிநாட்டு குடியேறுபவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளதன் காரணமாவே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply