தேசிய கண் வைத்தியசாலை வைத்தியர்களால் முன்னெடுக்கப்பட்ட அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் செயலாளருடனான கலந்துரையாடலையடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
தேசிய கண் வைத்தியசாலையில் இன்று காலை 8 மணி முதல் மாலை 4 மணிவரை அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தினை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.
வைத்தியசாலையின் நிர்வாக அதிகாரியின் அசமந்தப்போக்கு தொடர்பில் வைத்தியசாலை பணிப்பாளரும் சுகாதார அமைச்சும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளாமையினால் வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்பட்டதாக வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர், வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்திருந்தார்.
எவ்வாறாயினும், அவசர சிகிச்சைகள் மாத்திரம் முன்னெடுக்கப்படும் என அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.