இலங்கை மின்சார சபையின் விசேட அறிவிப்பு..!

நுரைச்சோலை அனல்மின் உற்பத்தி நிலையத்தின் முதலாவது மற்றும் இரண்டாவது மின்பிறப்பாக்கிகள் இம்மாதத்திற்குள் தேசிய கட்டமைப்புடன் இணைக்கப்படும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

மூன்றாவது மின்பிறப்பாக்கி முன்னதாகவே தேசிய கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளதாக மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர், பொறியியலாளர் நொயல் பிரியந்த தெரிவித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை நாடு முழுவதும் மின் விநியோகம் தடைப்பட்ட நிலையில் , நுரைச்சோலை அனல்மின் உற்பத்தி நிலையத்தின் முதலாவது மின்பிறப்பாக்கி செயலிழந்தது.

இதேவேளை, நுரைச்சோலையின் இரண்டாவது மின்பிறப்பாக்கி தொடர்ந்தும் செயலிழந்து காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Social Share

Leave a Reply