நாட்டிற்கு வருகைதந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்த மாதத்தின் முதல் 10 நாட்களில் மாத்திரம் 50 ஆயிரத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
இந்தியாவிலிருந்து மாத்திரம் 11 ஆயிரத்து 442 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
அத்துடன் இந்த மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் ரஷ்யாவிலிருந்து எட்டாயிரத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதுடன் பிரித்தானியாவிலிருந்து ஐயாயிரத்து 991 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
மேலும் ஜேர்மனிலிருந்து 5,336 சுற்றுலாப் பயணிகளும், சீனாவிலிருந்து 2,894 சுற்றுலாப் பயணிகளும் வருகை தந்துள்ளனர்.
இதற்கமைய இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 13 லட்சத்து 34 ஆயிரத்து 345 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.