சிறுவர்கள் சமூக ஊடகங்கள் பயன்படுத்துவதற்கு தடை..!

பிரித்தானியாவில் 16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்கள் பயன்படுத்துவதை வரையறுப்பது தொடர்பில் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் கவனம் செலுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரித்தானியாவில் அண்மையில் ஒன்லைன் பாதுகாப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

இதற்கமைய குறித்த சட்டமூலத்தில் சிறுவர்கள் சமூக ஊடகங்கள் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களின் பயன்பாடு சிறுவர்களுக்கு பாரிய விளைவுகளை ஏற்படுத்துவதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் அந்நாட்டு பிரதமரால் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சட்டமூலத்திற்கமைய செயற்படாத சமூக வலைத்தள நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய பிரதமரினால் முன்வைக்கப்பட்டுள்ள குறித்த ஆலோசனை அடுத்த வருட ஆரம்பத்திலிருந்து நடைமுறைப்படுத்தப்படும் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Social Share

Leave a Reply