கொலன்னாவ பகுதியில் இன்று அதிகாலை முதல் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் பல்வேறு போதைப்பொருட்களுடன் 42 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் இலங்கை இராணுவத்தினர் இணைந்து மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போதே குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது சந்தேகநபர்களிடமிருந்து ஹெரோயின், ஐஸ் மற்றும் கஞ்சா போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனின் உத்தரவிற்கமைய சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.