வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கு செல்லும் பெண்களுக்கு விதிக்கப்படவுள்ள தடை..!

ஐந்து வயதிற்குட்பட்ட பிள்ளைகளைக் கொண்ட தாய்மார்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கு செல்வதை, தடை செய்யும் சட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கு நாடாளுமன்ற குழு பரிந்துரைத்துள்ளது.

நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களத்தினால் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அண்மையில் நாடாளுமன்ற வளாகத்தில் கூடிய குழந்தைகள், பெண்கள் மற்றும் பாலின உறவுகளுக்கான துறைசார் மேற்பார்வைக் குழுவினால் இந்த பரிந்துரையளிக்கப்பட்டது.

தாய்மாரின் அரவணைப்பில்லாமல் 5 வயது வரை வளரும் பிள்ளைகளுக்கு ஏற்படும் பாதிப்பு அடுத்த 20 முதல் 25 ஆண்டுகளில் மிகப்பெரிய சமூக தாக்கத்தினை ஏற்படுத்தும் என விவாதிக்கப்பட்டது.

மேலும் குழந்தையொன்று சிறுவயதிலிருந்தே தாயை இழக்குமானால் எதிர்காலத்தில் மிகவும் வன்முறையான தலைமுறையாக உருவாகும் வாய்;ப்புள்ளதெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply