இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு சொந்தமான பயிற்சி நிலையங்களை யாழ்ப்பாணம் மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் ஹோமாகமயிலும் நிறுவுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக செல்வோருக்கு, அவர்கள் செல்கின்ற நாடுகளுக்கேற்றவாறான, துரிதமான விசேட பயிற்சி வேலைத்திட்டம் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தால் நடாத்தப்படுகின்றது.
நாடளாவிய ரீதியில் குத்தகை அடிப்படையில் பெற்றுக்கொள்ளப்பட்ட கட்டடங்களில் குறைந்தளவு வசதிகளுடன் இந்த பயிற்சிகள் தற்போது நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், உரிய வசதிகளுடன் கூடிய பயிற்சி நிலையங்களை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு சொந்தமான காணிகளில் அமைப்பதற்கு தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் யோசனை முன்வைத்தமை குறிப்பிடத்தக்கது.