சிவனொளிபாதமலை யாத்திரை ஆரம்பமாகவுள்ள நிலையில், யாத்திரைக்கான காலப்பகுதியில் கடைப்பிடிக்க வேண்டியவை தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் 26ம் திகதி முதல் அடுத்த வருடம் மே மாதம் 24ம் திகதி வரை சிவனொளிபாதமலை யாத்திரை காலம் இடம்பெறவுள்ளது.
இந்நிலையில் யாத்திரை காலத்தின் போது கடைப்பிடிக்க வேண்டிய விடயங்கள் தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் இரத்தினபுரி மாவட்ட அரசாங்க அதிபரினால் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய அனுமதிக்கப்பட்ட இடங்களை தவிர்த்து ஏனைய இடங்களில் வழிபாட்டு பொருட்கள் மற்றும் உணவு பொருட்கள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்யக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் புகையிலை உள்ளிட்ட சில பொருட்களை சிவனொளிபாதமலைக்கு எடுத்துச் செல்வதற்கும் விற்பனை செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் அனுமதிக்கப்பட்ட இடங்களை தவிர்ந்த ஏனைய இடங்களில் தற்காலிக அல்லது நிரந்தர வர்த்தக நிலையங்கள் உள்ளிட்ட கட்டிடங்களை நிர்மாணிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் அன்னதானம்; வழங்குவதற்கு முன்னர் அதற்கான அனுமதி பெறப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, சிவனொளிபாதமலை ஸ்தலம் மற்றும் ஓய்வறை உள்ளிட்ட எப்பகுதியிலும் யாசகம் பெறுவதற்கு தடை விதிக்கப்படுவதாக வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.