2023ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான தனியார் வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகள் நடாத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 29 ம் திகதி முதல் அமுலாகும் வகையில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் 31ம் திகதி வரை நாடளாவிய ரீதியில் 2 ஆயிரத்து 298 பரீட்சை நிலயங்களில் உயர்தரப் பரீட்சை நடைபெறவுள்ளது.
இந்நிலையில் பரீட்சை நிறைவடையும் வரை பிரத்தியேக வகுப்புகள்;, கருத்தரங்குகள் மற்றும் பயிற்சி பட்டறைகள் நடாத்துபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென பரீட்சைகள் மேலும் தெரிவித்துள்ளது.