மாத்தறை சிறைச்சாலையில் மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கைதியொருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும் எட்டு கைதிகள் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை பேச்சாளர் காமினி பி. திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த கைதி மூளைக்காய்ச்சல் காரணமாக மாத்தறை வைத்தியசாலையின்; தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் சிகிச்சைப் பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொலை குற்றச்சாட்டின் கீழ் கடந்த ஒகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த கைதியே இவ்வாறு உயிரிழநதுள்ளார்.