சர்ச்சைக்குரிய இம்யூனோகுளோபுலின் தடுப்பூசி இறக்குமதி செய்யப்பட்டமை தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிடம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் வாக்குமூலம் பதிவு செய்து வருகின்றனர்.
இதற்காக, குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கொழும்பிலுள்ள முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் இல்லத்துக்கு இன்று முற்பகல் விஜயம் மேற்கொண்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த, தடுப்பூசியை இறக்குமதி செய்த நிறுவனத்தின் உரிமையாளர் சுகத் ஜானக பெர்னாண்டோ ஆகியோர் முன்னதாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் மருத்துவ விநியோக பிரிவின் முன்னாள் பணிப்பாளர் வைத்தியர் கபில விக்ரமநாயக்க உள்ளிட்ட நால்வர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.