பிரபல திரைப்பட நடிகரும் தே.மு.தி.க கட்சியின் தலைவருமான விஜயகாந்த் தனது 71வது வயதில் காலமானார்.
சென்னை, மியாட் மருத்துவமனையில் அவர் காலமானதாக இந்திய ஊடகங்கள் செய்து வெளியிட்டுள்ளன.
கொரோனா தொற்று உறுதியான நிலையில், மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த போதிலும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
சமீபத்தில் இடம்பெற்ற தேமுதிக பொதுக்குழு கூட்டத்திலும் அவர் கலந்துகொண்டிருந்தார்.