கண்டி – மஹியங்கனை பிரதான வீதியூடான போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது.
உடுதும்புர பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக குறித்த வீதியூடான போக்குவரத்து பாதிப்படைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சாரதிகள் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும் மண்மேட்டை அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.