டிசம்பரில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள்..!

இந்த மாதத்தில் மாத்திரம் 10 ஆயிரத்திற்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு நோய் கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மேல் மாகாணத்தில் மாத்திரம் 39,543 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

அத்துடன் கம்பஹா மாவட்டத்தில் 18, 401 டெங்கு நோயாளர்களும் கொழும்பு மாவட்டத்தில் 16,020 பேரும் களுத்துறை மாவட்டத்தில் 5,122 டெங்கு நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய இந்த ஆண்டில் 87,078 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு நோய் கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் 62 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு அபாய வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

Social Share

Leave a Reply