சிபெட்கோ நிறுவனம் எரிபொருள் விலையை இன்று(01.01) முதல் அமுலாகும் வகையில் மாற்றியமைத்துள்ளது.
இதன்படி லங்கா பிரிட்ரல் ஒக்டேன் 92 இன் விலை 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி,அதன் புதிய விலை 366 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
லங்கா பெற்றோல் ஒக்டேன் 95 லீற்றர் ஒன்றின் விலை 38 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 464 ரூபாவாகும்.
டீசல் லீற்றர் ஒன்றின் விலை 29 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் , அதன் புதிய விலை 358 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சுப்பர் டீசல் ஒரு லீற்றரின் விலை 41 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன்புதிய விலை 475 ரூபாவாகும்.
மண்ணெண்ணெய்யின் விலை 11 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 236 ரூபாவாகும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.