ஜப்பானில் நிலநடுக்கத்தால் பலியானோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

ஜப்பானில் நேற்று (01.01) 7.6 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளனர்.

சுனாமி எச்சரிக்கை மீள்பெற்ப்பட்ட போதிலும், நில அதிர்வால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் இப்போதைக்கு தங்கள் வீடுகளுக்கு திரும்பிச் செல்ல வேண்டாம் என ஜப்பான் அரசு அறிவுறுத்தியுள்ளது.

அந்நாட்டு கடல் மட்டத்தில் சில மாற்றங்கள் இருப்பதால், மக்கள் கடல் சார் பணிகளை சில நாட்களுக்கு ஒத்திவைக்குமாறு அறிவுறுத்தபட்டுள்ளது.

கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் நிகாடா, டோயோமா, புகுயி, கிஃபு மாகாணாங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆகா அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Social Share

Leave a Reply