கிளிநொச்சியில் வாக்காளர் விண்ணப்பப் படிவம் பூர்த்தி செய்யும் நடவடிக்கை முன்னெடுப்பு!

நாட்டில் பல பகுதிகளிலும் கிராம சேவையாளர் பிரிவுகளில் வாக்காளர் விண்ணப்ப படிவம் பூர்த்தி செய்யும் வேலை திட்டம் (02.01) திகதி தொடக்கம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில், கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம சேவையாளர் பிரிவுகளிலும் வாக்காளர் விண்ணப்பப் படிவம் பூர்த்தி செய்யப்பட்டு வருவதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் கிளிநொச்சி மாவட்ட ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட சில பகுதிகளில் இன்றைய தினம் (03.01) வாக்காளர் விண்ணப்பப் படிவம் பூர்த்தி செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மேலும், புதிதாக 18 வயது பூர்த்தி அடைந்த அனைவரும் வாக்களர்களாக இணைத்துக் கொள்ளும் விண்ணப்பபடிவமும் இணைத்துக்கொள்ளப்பட்டுவருவதுடன், இறந்தவர்கள் நீக்கம் செய்வதற்கான பணியும் நடைபெற்று வருகிறது.

தொடர்ச்சியாக இம்மாதம் முழுவதும் வாக்காளர் விண்ணப்ப படிவம் பூர்த்தி செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தனர். வாக்களார்களின் வீடு வீடாக கிராம சேவையாளர்கள் சென்று வாக்களர் விண்ணப்படிவம் பூர்த்தி செய்துள்ளனர்.

Social Share

Leave a Reply