மன்னார் மாவட்டம் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள முள்ளிக்குளம் கடற்படை முகாமைச் சேர்ந்த கடற்படைச் சிப்பாய் ஒருவரே முகாமுக்கு வெளியில் தூக்கில் தொங்கிய நிலையில் நேற்று (04.01) வியாழக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இறந்தவரின் பெயர் சி.சி.என் ரொசான் மூன்று பிள்ளைகளின் தந்தை என்றும் முள்ளிக்குளம் கடற்படை முகாமில் கடமை புரிந்தவர் என்றும் தெரிய வருகிறது.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது அங்குள்ள கடற்படையினரின் விடுதியில் மனைவி மற்றும் குழந்தையுடன் தங்கியிருந்தநிலையில் நேற்று முன் தினம் 2 ஆம் திகதி தனது மோட்டார்சைக்கிளில் வெளியில் சென்ற இவர் வீடு திரும்பவில்லை என்று அவரது மனைவி முள்ளிக்குளம் பிரிவிற்குரிய சிலாவத்துறை பொலிஸ் நிலையத்தில் நேற்று 3 ஆம் திகதி முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்துள்ளார்.
இந்த நிலையில் இன்றைய தினம் 4 ஆம் திகதி தூக்கில் தொங்கிய நிலையில் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளைச் சிலாவத்துறை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.